கொரோனாவில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு குழு

கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.    நாடு முழுவதும் கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் நிலையில், தமிழ்நாடு அரசு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.…

கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

நாடு முழுவதும் கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் நிலையில், தமிழ்நாடு அரசு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க மாநில அளவிலான சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்குழுவுக்கு, சென்னை எழும்பூர் மகப்பேறு & குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் உறுப்பினர் செயலராக செயல்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்பு பணிக்குழு கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள், பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.