நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் : அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரையோட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது மணிபபூர் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனது. இதனால்…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரையோட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது மணிபபூர் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனது. இதனால் அவை நடவடிக்கை முடங்கியது.
இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு தனித்தனியே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலை அரசு வெளியிடவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவது  குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.