பழுதான அங்கன்வாடி மையங்களை சிறப்பு கவனம் செலுத்தி கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது பேசிய எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா முன்னாள் அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி இல்லத்தில் அமைக்கப்பட்டிருப்பது போன்று ஏழைக் குழந்தைகள் பராமரிப்பு மையங்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஏழைக் குழந்தைகள் பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்து அதுபோல அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், பழுதான நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை, சிறப்பு கவனம் செலுத்தி கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: சிறுமியின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை
இதனால், தமிழ்நாட்டில் பழுதாகிய நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்கள் விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கருத்து தெரிவிகின்றனர். அதேபோல, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததற்கு நன்றி என உறுப்பினர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








