`சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும்’ – எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம்…

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை சந்தித்ததாகவும் இந்த விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் புலம்பெயர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் கூட்டத்தில் யார் பங்கேற்பது என முறைப்படி அறிவிக்க உள்ளதாகவும், ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கவுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர். அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தி கடிதம் அளித்ததாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.