“தென்னிந்தியாவையே கலக்குற Collab” – சஸ்பென்ஸ் வைத்த அனிருத்!

இசையமைப்பாளர் அனிருத் கொடுத்துள்ள அப்டேட்  ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.  தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே வெரைட்டியான இசையை கொடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். …

இசையமைப்பாளர் அனிருத் கொடுத்துள்ள அப்டேட்  ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது. 

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே வெரைட்டியான இசையை கொடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார்.  முக்கியமாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ட்ரெண்டானது.  அனிருத்துக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.  அவர் இசையமைத்த அத்தனை படங்களின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன.

பாலிவுட்டில் ஜவான் படத்தில் இசையமைத்த பிறகு,  இந்தி ரசிகர்களை கவர்ந்த அனிருத்,  தற்போது ஜூனியர் என்.டி.ஆர், விஜய் தேவர்கொண்டா ஆகியோரின் அடுத்த படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.  ஏற்கனவே ரஜினியின் வேட்டையன், கூலி, கமலின் இந்தியன் 2, அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருவதுடன் அடுத்ததாக சிவகார்த்திகேயன், பிரதீப், கவீன் உள்ளிட்டவர்களின் அடுத்த படங்களுக்கும் இசையமைக்க உள்ளார் அனிருத்.

இந்த நிலையில் அனிருத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கொடுத்துள்ள அப்டேட்  ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.  அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்,  “தென்னிந்தியாவையே கலக்கப்போகும் Collab லோடிங்.. ” என ட்வீட் செய்துள்ளார்.  இது குறித்த தகவல்களை இன்று வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.  இது அவர் இசையமைத்து வரும் படம் தொடர்பான அப்டேட்டா? இல்லை புதிய படம் குறித்த அறிவிப்பா என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.