தெற்காசியாவின் முதல் “F1” சர்க்யூட் ரேஸிங் போட்டிகள்; சென்னையில் நடக்கவுள்ளதாக அறிவிப்பு!

தெற்காசியாவின் முதல் ஃபார்முலா சர்க்யூட் ரேஸிங் போட்டிகள் சென்னையில் நடத்தப்படவுள்ளது.                 பெருநகர சென்னை மாநகராட்சி (GCC), சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA), தமிழ்நாடு விளையாட்டு…

தெற்காசியாவின் முதல் ஃபார்முலா சர்க்யூட் ரேஸிங் போட்டிகள் சென்னையில் நடத்தப்படவுள்ளது.                

பெருநகர சென்னை மாநகராட்சி (GCC), சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரவைட் லிமிடெட் ஆகியவை இணைந்து, தெற்காசியா மற்றும் இந்தியாவில் முதல் முறையாக ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி சென்னையில் நடத்தப்படவுள்ளது.

வரும் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது. ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கூடுதல் செயலர் அதுல்யா மிஸ்ரா, உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மற்றும் RPPL நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.