லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் கூலி. ரஜினியின் 171வது படமான கூலியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சௌபின் ஷாயிர், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
குறிப்பாக நடிகர் அமீர் கான் வில்லன் கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். லோகேஷ் கனகராஜ் – ரஜினி கூட்டணி மட்டுமின்றி, பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், கூலி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவுள்ளது.







