சூரியின் மண்டாடி: 100 கோடி வசூல்!

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 10 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

தமிழ்திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்த சூரி தற்போது கதாநாயகன் அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த விடுதலை, மாமன், கருடன், கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்படங்களாக அமைந்தன இந்த நிலையில் இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில், சூரி கதாநாயகனாக நடித்து வெளியான படம் மண்டாடி.

இப்படத்தில் சூரியுடன் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த 10-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் பெரும் வசூலையும் குவித்துவந்தது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி 10 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இது சூரி கதாநாயகனாக நடித்து 100 கோடி வசூல் செய்த முதல் படமாகும்.

இதுகுறித்து நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “உங்கள் பேரன்பால்…மண்டாடி 100+ கோடி! இந்த வெற்றி முழுக்க முழுக்க உங்களுடையது. கோடி நன்றிகள்!” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.