முக்கியச் செய்திகள் சினிமா

மெல்போர்ன் திரைப்பட விழாவில் விருதை வென்ற ‘சூரரைப் போற்று’

ஆஸ்திரேலியா நாட்டில் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று‘ திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

மெல்போர்ன் நகரில் 2021ம் ஆண்டிற்கான இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இதில் ‘சூரரைப் போற்று’, ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ போன்ற படங்கள் பங்கேற்றது. இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றுள்ளது.

கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றின் குறிப்பிட்ட சில பகுதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருந்தது. இந்த நிலையில், மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இரண்டு விருதுகளை இத்திரைப்படம் வென்றதையடுத்து ரசிகர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல சிறந்த நடிகைக்கான விருதினை ‘ஷெர்னி’ திரைப்படம் மூலம் நடிகை வித்யா பாலன் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

‘நீட்’ குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவல்: மா.சுப்பிரமணியன்

Gayathri Venkatesan

மாணவர்களின் ஆன்லைன் கல்வி: பெற்றோர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

Gayathri Venkatesan

அமெரிக்க அதிபரின் உரை ஆசிரியரானார் இந்திய வம்சாவளி நபர்!

Jayapriya