ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதன் 31ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு, மே 21ம் தேதி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
உயிரிழந்த ராஜிவ் காந்தியின் நினைவாக டெல்லியில் வீர் பூமி என்ற பெயரில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது.
ராஜிவ் காந்தி உயிரிழந்ததன் 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மனைவியும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, வீர் பூமியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அவரோடு, அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் தனது தந்தையின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்பட பலர் ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.










