அ.தி.மு.க வின் உண்மை தொண்டர்கள் தான் ஸ்லீப்பெர் செல்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அரசு கொரடாவும் தற்போதைய அமமுக மாநில பொருளாருமான ஆர். மனோகரனின் தாய் ராமலட்சுமி அம்மாள் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து திருச்சி திருவானைக்காவலில் உள்ள மனோகரனின் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு டிடிவி தினகரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு தள்ளாடும் அரசாக தான் உள்ளது என விமர்சனம் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சசிகலாவை வரவேற்க திரண்ட உண்மை அதிமுக தொண்டர்கள் தான் ஸ்லீப்பர் செல்கள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.