32.8 C
Chennai
May 27, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

விரைவில் வெளியாகும் சிவி 2

சிவி 2 திரைப்படம் ஜுலை 22 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆர் மாஸ் புரொடக்ஷன் ஆனந்த் பாபு வழங்கும் திரைப்படம் சிவி 2. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதையை மையமாக கொண்டு சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது. இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படாத வகையில் மாறுபட்ட கோணத்தில் ஆங்கில படத்திற்கு நிகராக உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படத்தில் தேங்காய் சீனிவாசன் பேரன் யோகி, மற்றும் தேஜா சரண்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்திரி, குமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஆர் கே செந்தில் நாதன் இப்படத்தை எழுதி, இயக்குகிறார். சிவி 2 திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஆர் மாஸ் புரொடக்ஷன் ஆனந்த் பாபு வெளியிடுகிறார். விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கின்ற மாணவ, மாணவிகள், பல வருடங்களாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய செல்கிறார்கள்.

ஆனால் அவர்கள் குறித்த எந்த தகவலும் இல்லை. காணாமல் போன மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசார் சில விசாரணைக்கு பிறகு மாணவ மாணவிகள் சென்ற மருத்துவமனைக்கு தேடிச் செல்கிறார்கள். அங்கு சில வீடியோ ஆதாரம் மற்றும் செல்போன் ஆதாரங்களை கைப்பற்றுகின்றனர். அதை ஆய்வு செய்த போலீசார், அதில் பல ரத்தம் உறைய வைக்கும் சில சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.  இதன் பின்னணியில் விறுவிறுப்பு குறையாமல் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் சிவி 2 திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading