சிவராஜ்குமார் நடித்துள்ள ‘கோஸ்ட்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
எம் ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள இப்படத்தை சந்தேஷ் நாகராஜ் தனது சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார். அனுபம் கெர், ஜெயராம், பிரசாந்த் நாராயண், அர்ச்சனா ஜோயிஸ், சத்யபிரகாஷ் மற்றும் தத்தன்னா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இப்படத்துக்கு மகேந்திர சிம்ஹா ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபு எஸ் குமார் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் மாஸான பஞ்ச் வசனங்களோடு பிரம்மிப்பூட்டும் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டிரைலரின் இறுதியில் இளம் வயது கதாபாத்திரத்தில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் இப்படம் கேஜிஎப்-ஐ போல் பிரம்மாண்ட வெற்றிபெறும் என யூகித்து வருகின்றனர்.