குன்னூரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா. சுப்பிரமணியன், அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை வழங்கினார்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில், தென்காசி மாவட்டம், கடையத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்து நடந்த மரப்பாலம் பகுதியை அமைச்சர் மா.சுப்பிரணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் கா. ராமச்சந்திரன் இருவரும் அஞ்சலி செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த, தலா இரண்டு லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கினர். பின்னர், விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்கள், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கினர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தனித் தனி ஆம்புலன்ஸ் வாகனங்களில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.