முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

கமல் குரலில் CODE RED Activate செய்யும் அனிருத்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் ‘விக்ரம்’ படத்திற்கான எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில காலங்களாக உச்சநட்சத்திரங்கள் நடிக்கும் தமிழ் படங்கள் பெருதாக ஹிட் அடிக்காத நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் ரீவிசிட் அடிக்கிறார் கமல்.

தன்னுடைய வெறித்தனமான ரசிகரான லோகியுடன் கைகோர்த்து அவர் செய்யும் சம்பவம் திரையரங்குகளில் ஆடியன்ஸை மெர்சல் ஆக்க தயாரிக்கொண்டிருக்கிறது. இதுவரை வெளியான படத்தின் first look, டீஸர், மேக்கிங் வீடியோ என அத்தனைக்காட்சிகளுமே இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில், தோட்டாக்கள் வெடிக்க இன்னும் 25 நாளில் விக்ரம் on the way என ட்விட்டரில் இன்று ஒரு promo வீடியோவை வெளியிட்டார்கள். மேலும் இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இசை ரவுடி அனிருத்தின் இசையில், உலக நாயகன் கமல் ஹாசன் ஒரு பாடலை எழுதி பாடுகிறார் என்ற தகவலை இயக்குநர் லோகியும், இசையமைப்பாளர் அனிருத்தும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

‘பத்தல பத்தல’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சிங்கில் பாடல் வரும் 11ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே code red என்ற வார்த்தைகளுடன் இந்த பாடலுக்கான முன்னோட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை வைத்து பார்க்கும் போது இது rap பாடலாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இந்நிலையில் Rap and fast beat-ல் ஒரு தரமான சரவெடியை கேட்டு மகிழ தமிழ் சினிமா ரசிகர்கள் தயாரிகிக்கொண்டிருக்கின்றனர்

Advertisement:
SHARE

Related posts

இந்தியா – இலங்கை: 574 ரன்களை குவித்த இந்தியா.

Halley Karthik

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்

Halley Karthik

கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா

Saravana Kumar