குறும்பா என் உலகே நீ தான்டா.. 2-வது மகனுக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயனின் 2-வது மகனுக்கு பவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பிறகு திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், மற்றும் நடிகர் என பன்முகங்களில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். …

நடிகர் சிவகார்த்திகேயனின் 2-வது மகனுக்கு பவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பிறகு திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், மற்றும் நடிகர் என பன்முகங்களில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன்.  இவர் திரை உலகுக்கு வரும் முன்பே திருமணம் ஆனது. தனது மாமா மகளான ஆர்த்தியை கரம் பிடித்திருந்தார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகளும், இரு மகன்களும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்தான் மூன்றாவதாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது. இதற்கு அவரது ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவ்வப்போது குடும்ப புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வரும் சிவகார்த்திகேயன் கடந்த வாரம் கூட தனது மகன் குகனின் பிறந்தநாளன்று சில புகைப்படங்களை பகிர்ந்தார். இந்நிலையில் தனது இரண்டாவது ஆண் குழந்தைக்கு பவன் சிவகார்த்திகேயன் என பெயர் வைத்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

“உங்களின் வாழ்த்துகள் மற்றும் ஆசிர்வாதங்களுடன் எங்களின் சின்ன குழந்தைக்கு பெயர் வைத்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு வளர்ச்சி இருக்கிறதோ அந்த அளவிற்கு தன்னை பற்றி நெகட்டிவான கருத்துகளும், வதந்திகளும் பரவி வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பம் மற்றும் சினிமா இரண்டையும் சம நிலையில் எடுத்து சென்று கொண்டிருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.