முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

இணையத்தை மீண்டும் கொளுத்திய ஜலபுல ஜங்கு

இளையராஜா போலவே மக்கள் இசைகளை கையில் எடுத்து அதில் தன் வண்ணங்களை பூசி திரையில் அடித்து நொறுக்குவது அனிருத் ஸ்டைல். அந்த வரிசையில் சென்னை இளைஞரின் இந்த குரலை அப்படியே எடுத்து தன்னுடைய இசையில் கோர்த்து ‘ஜலபுல ஜங்கு’ என பொளந்து கட்டினார் அனிருத்.  ‘அமுக்கு டுமுக்கு அமால் டுமால்’ எனும் அந்த சென்னை இளைஞரின் குரல் உலகம் முழுக்க ஒலிக்கத்தொடங்கியது.

இந்த பாடல் வெளியானதில் இருந்தே இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கல்லூரி விழா, திருமண விழா, அலுவலக விழா என எல்லா இடங்களிலும் போட்டு bad vibeகளை விரட்டி good vibeகளை அடைந்தனர். திரையரங்குகளிலும் மற்ற நடிகர்களின் படங்கள் ஓடும் போது கூட இடைவேளையில் இந்த பாடலை சொருகி ஆடியன்ஸை vibe செய்ய வைத்தனர்(Vibe என்றால் ஜலபுல ஜங்கு பாடலை கேட்கும்போது ஏற்படும் உற்சாக உணர்வு என்று புரிந்துகொள்ளலாம்).

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் படம் வெளியாகி கமர்ஷியலாக ஹிட் அடித்தது. முந்தைய படங்களை விட சிவகார்த்திகேயனின் நடனங்களில் டெடிகேஷனும், பெர்ஃபெக்‌ஷனும் பல மடங்கு கூடியிருந்ததை பார்க்கமுடிந்தது.இதனைத்தொடர்ந்து இப்பாடலின் வீடியோவை யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளது படக்குழு. சிவகார்த்திகேயனின் நடத்துடன் மீண்டும் இப்பாடலை ட்ரெண்ட் ஆக்கி vibe செய்துவருகின்றனர் இணையவாசிகள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி!

Niruban Chakkaaravarthi

மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவர்!

எல்.ரேணுகாதேவி

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Ezhilarasan