வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் சமத்துவமின்மை ஆகியவை பட்ஜெட்டில் ஒருமுறை கூட இடம்பெறவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். 7 முன்னுரிமைகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் பேசுகையில், வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமத்துவமின்மை போன்ற சொற்கள் ஒருமுறை கூட நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் இல்லை. ஏழை என்ற வார்த்தையை மட்டும் இரக்கப்பட்டு பயன்படுத்தினார். தற்போதைய அரசு யாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது, யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “ஏழைகள், இளைஞர்கள், வரி செலுத்துபவர்கள் என யாருமே இந்த பட்ஜெட் மூலம் பயனடைய மாட்டார்கள். புதிய வரி விதிப்பு முறைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தற்போதைய அறிவிப்புகள் உள்ளது. புதிய வரி விதிப்பு முறை முற்றிலும் நியாயமற்றது. இந்த வரிவிதிப்பு முறை சாதாரணமாக வரி செலுத்துபவர்களின் சமூக பாதுகாப்பை பறிக்கிறது. பழைய வரி விதிப்பு முறையில் சமூக பாதுகாப்பு இன்னமும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.