சிவாஜியின் பட்டத்து ராணி, எங்கே நிம்மதி பாடல்கள் உருவானது எப்படி? சுவாரஸ்ய தகவல்கள்

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம் பாடலா, வரிகளா, இசையா என இன்றல்ல.. பல காலமாகவே தமிழ்த் திரையுலகில் ஆரோக்கியமான பட்டிமன்றம் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. ஒரே ஒரு இசைக்கருவியின் துணை கொண்டு இசைக்கப்பட்ட பாடலும் வெற்றி…

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம் பாடலா, வரிகளா, இசையா என இன்றல்ல.. பல காலமாகவே தமிழ்த் திரையுலகில் ஆரோக்கியமான பட்டிமன்றம் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது.

ஒரே ஒரு இசைக்கருவியின் துணை கொண்டு இசைக்கப்பட்ட பாடலும் வெற்றி பெற்றுள்ளது.. நூற்றுக்கும் மேற்பட்ட கருவிகளுடன் இசையமைக்கப்பட்ட பாடலும் வரவேற்பை பெற்றுள்ளது என்கிறார் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தில் வரும் கண்ணான பூமகனே பாடலில் ஒரே ஒரு கருவியின் இசை மட்டுமே இடம்பெற்றிருக்கும்.. ஒரே இசைக்கருவி என்றாலும் நெஞ்சைப் பிழியும் வரிகளால் பாடல் மேலோங்கி நிற்கும்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து பெரிதும் பேசப்பட்ட பாகப்பிரிவினை திரைப்படத்தில் வரும் தாழையாம் பூ முடிச்சு பாடலில், 4 முதல் 5 இசைக்கருவிகள் மட்டுமே இடம்பெற்றது. பாடல் படமாக்கப்பட்ட விதம், மாற்றுத்திறனாளியாக சிவாஜியின் நடிப்பு மற்றும் மெல்லிசையால் அந்தப் பாடல் அனைவரையும் கவர்ந்தது.
பாடலை படம்பிடிக்க ஏற்றபடி காட்சி, ஒன்றல்ல 100க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் இசைக்க பாடலை உருவாக்கிய காலங்களும் உண்டு.

அப்படி உருவான பாடல்தான் சிவந்தமண் திரைப்படத்தில் இடம்பெற்ற பட்டத்து ராணி பாடல்.. புதிய பறவை திரைப்படத்தில் இடம் பெற்ற சாகாவரம் பெற்ற பாடலான “எங்கே நிம்மதி எங்கே நிம்மதி” என்ற பாடலை ஏவிஎம் ஸ்டுடியோ ஒலிப்பதிவு கூடத்தில் 110 இசைக்கருவிகளை கொண்டு இசையமைத்திருந்தனர். எல்லோரும் அமர்ந்து வாசிக்க இடம் இல்லாததால் எதிர் அறையில் அமர்ந்து வாசித்தனர். ஒவ்வொரு முறையும் ஒருவர் துணி அசைத்து சைகை காண்பித்தபின் பாடல் இசையமைக்கப்பட்டது. தற்போது கணினி வசம் போய்விட்ட இசையை, தங்கள் கட்டுக்குள் வைத்து மெல்லிசையாய் பாடல்கள் தந்த இசையமைப்பாளர்கள் வாழ்ந்த காலம் பொற்காலம் தான்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.