சகோதரர்களுடன் உற்சாக நடனமாடிய பெண்ணின் வீடியோ வைரல்!

குடும்ப நிகழ்ச்சியில் பெண் ஒருவர் சகோதரர்களுடன் ஆடிய நடனம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடனம் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகும். நெருங்கிய உறவுகள் சூழ்ந்திருக்கும்போதும் உற்சாக மிகுதியில் இருப்பது இயல்புதான். அதுவும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக உறவுகளுடன்…

குடும்ப நிகழ்ச்சியில் பெண் ஒருவர் சகோதரர்களுடன் ஆடிய நடனம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடனம் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகும். நெருங்கிய உறவுகள் சூழ்ந்திருக்கும்போதும் உற்சாக மிகுதியில் இருப்பது இயல்புதான். அதுவும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக உறவுகளுடன் இணைந்திருக்கிறோம் என்றால் இயல்பாகவே நடனம் வரும். அப்படி ஒருபெண், குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் தன் சகோதரர்களுடன் ஆடிய நடனம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘டான்ஸ் வித் அமிஷா’ என்ற இன்ஸ்டாகிராம் பயனாளர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். ‘குடும்ப விழாவில் ஒருவழியாக வற்புறுத்தி உங்கள் சகோதரர்களை உங்களுடன் இணைந்து நடனமாட வைத்தால் இப்படித்தான் இருக்கும்.’ என்று கூறியுள்ளார். அந்த வீடியோவில் அமிஷா தன் சகோதரர்கள் ஏக்னாஸ், ககன் ஆகியோருடன் இணைந்து Jehda Nasha and Nadiyon Paar (ஆல்பம்) பாடல்களுக்கு ஆடியுள்ளார். உறவுகள் ஆரவாரம் செய்ய, அற்புதமான நடனத்தாலும் அந்த வீடியோ காண்போரை கவர்ந்திழுக்கிறது.

பதிவிட்ட 6 நாள்களில் 2 மில்லியன்களை கடந்து வீடியோ வைரலாகி வருகிறது. “இது மிகவும் கடினமான விஷயமாச்சே. அவர்களை எப்படி ஆடவைத்தார்கள்?”. “மிகவும் சிறப்பாக ஆடியுள்ளனர். “இந்த வீடியோ என் பொழுதை இனிதாகிவிட்டது.” என நெட்டிசன்கள் கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.