முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் மகளிர் பேட்மிண்டன் – பி.வி.சிந்து முன்னேற்றம்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சிறப்பாக விளையாடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய்,கஷ்யப்,சமீர் வெர்மா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பெல்ஜியத்தின் வீராங்கனையான லியானே டானை எதிர்த்து விளையாடினார்.

 

உலக தரவரிசையில் 7வது இடத்திலுள்ள பி.வி.சிந்து தரவரிசையில் மிகவும் பின் தங்கியுள்ள லியானே டானை எளிதாக எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-15 என்ற 21-11 என்ற இரண்டு செட் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

பழுதுபார்ப்பிற்காக L&T காட்டுப்பள்ளி கப்பல் தளத்தை அடைந்த அமெரிக்க கடற்படை கப்பல் “சால்வர்”..!!

Web Editor

அமளியில் ஈடுபட்ட எம்.பிக்கள் மீது நடவடிக்கை; வெங்கையா நாயுடுவிடம் அமைச்சர்கள் கோரிக்கை

G SaravanaKumar

இல்லம் தேடி கல்வி திட்டம்; முதலமைச்சருடன் அன்பில் மகேஸ் ஆலோசனை

G SaravanaKumar