சீர்காழி அருகே செல்போனில் தொடர்ந்து பேசியதால் தங்கையை அடித்து கொன்ற அண்ணனை போலீசார் கைதுசெய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கலையழகி. இவர் கடந்த 25ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கலையழகி செல்போனில் தனது நண்பர்களுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். அதனை அவரின் பெரியப்பா மகன் ரகு என்பவர் கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரகு, கலையழகியை அடித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.







