முக்கியச் செய்திகள் விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் முட்கில் வெண்கலம் வென்றார். மேலும், தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்து அவர் சாதனை புரிந்துள்ளார்.

தென் கொரியாவில் நடைபெற்றுவந்த உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய மகளிர் குழுவான அஞ்சும் முட்கில், சாக்ஷி ஆஷி, சம்ரா சிப்ட் கவுர் உள்ளிட்டோர் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தரவரிசை சுற்றுக்கு நடைபெற்ற தகுதிச்சுற்றில் அஞ்சும் முட்கில் 586 புள்ளிகள் பெற்றார். தரவரிசை சுற்றில் 402.9 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார்.

இதற்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஞ்சுல் முட்கில் வெள்ளி வென்றார்.

“டோக்கியோ ஒலிம்பிக் போட்டி எனக்கு பலவற்றை கற்றுக் கொடுத்தது. அங்கு கிடைத்த அனுபவம் எனக்கு இந்தப் போட்டியில் உதவியது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு வழக்கமான பயிற்சிக்குத் திரும்ப நிறைய நேரம் எடுத்துக் கொண்டது.
நம்பர் 1 வீராங்கனையாகி இருப்பது கூடுதல் அழுத்தத்தை தரும். முதல் முறையாக நான் நம்பர் ஒன் வீராங்கனையாகி இருக்கிறேன். இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார் அஞ்சும் முட்கில்

இதனிடையே, 50 மீ ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளி வென்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

EZHILARASAN D

கோவையில் தடம் புரண்ட சரக்கு ரயில்!

Gayathri Venkatesan

அசாம், மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு!

Gayathri Venkatesan