30.8 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

தனுஷுக்கு வில்லனாகும் சிவராஜ்குமார்…? கேப்டன் மில்லர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷின் அண்ணனாக வரும் சிவராஜ்குமார், படத்தின் முக்கிய வில்லனாக இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.இந்த படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. அண்மையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஜூலை 28 சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர் என்று பதிவிட்டிருந்தார். இந்த கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என பேசப்பட்டது.

அந்த வகையில்,  ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர், அவரது பிறந்தநாளையொட்டி நள்ளிரவில்  வெளியானது.  டீசரின் தொடக்கம் முதல் இறுதி வரை துப்பாக்கி குண்டுகள் சத்தம் தெறிக்கிறது. மேலும் யூடியூபில் இந்த டீசர் 3 கோடி பார்வைகளை கடந்து  உள்ளது.

இந்நிலையில், கேப்டன் மில்லரில் தனுஷின் அண்ணனாக வரும் சிவராஜ்குமார், படத்தின் முக்கிய வில்லனாக இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம், வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading