தேர்தல் 2024: டெல்லியில் தனித்து போட்டியிடும் காங்கிரஸ் -ஆம் ஆத்மி அதிருப்தி…

நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதால், இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லியில் உள்ள 7 மக்களவைத்…

நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதால், இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் தேர்தல் ஆயத்தப் பணிகளை தொடங்குவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் வகையில் தயாராகும்படி கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவால் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம்ஆத்மி
கட்சி கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா காக்கர், டெல்லியில் தங்களுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்பதால், அடுத்து மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டு நேரத்தை வீணடிக்க ஆம்ஆத்மி விரும்பவில்லை என்றார். இதுதொடர்பாக கட்சித் தலைமை விரைவில் இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.