சோமாலியா அருகே 15 இந்திய மாலுமிகளுடன் கப்பல் கடத்தல் | மீட்பு நடவடிக்கைக்காக விரைந்தது INS சென்னை…!

15 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பலை நடுக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆப்ரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில் சரக்கு கப்பல் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்த கப்பலில் 15…

15 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பலை நடுக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்ரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில் சரக்கு கப்பல் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்த கப்பலில் 15 இந்திய மாலுமிகள் இருந்தனர்.  கடத்தல் குறித்த தகவல் கிடைத்ததும் இந்திய கடற்படையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.  இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சென்னை, கடத்தப்பட்ட கப்பலை நோக்கி நிலைமையை சமாளிக்க நகர்ந்து வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

நேற்று மாலை கப்பல் கடத்தப்பட்டதாக இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளது.  இந்த கப்பலில் லைபீரியாவின் கொடி இருந்ததாகக் கூறப்படுகிறது.

சமீப காலமாக சரக்குக் கப்பல்கள் மீதான கடல்வழித் தாக்குதல்கள் திடீரென அதிகரித்துள்ளன.  முன்னதாக, டிசம்பர் 23ஆம் தேதி அரபிக்கடலில் போர்பந்தர் கடற்கரையில் வணிகக் கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது.  அந்த கப்பல் ஊழியர்களில் 21 இந்தியர்கள் இருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.