மியான்மரின் புதிடாங் நகரில் இருந்து வழக்கம்போல் கடல் வழியாக கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த கப்பலில் 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். கப்பல் தொடக்கத்தில் சாதாரணமாக சென்றுக்கொண்டிருந்தது. அந்த கப்பல் தாய்லாந்து-மலேசியா எல்லை அருகே உள்ள லங்காவி பகுதியில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பாரம் தாங்காமல் அந்த படகு எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில், கப்பலில் பயணம் செய்த அனைவரும் கடலில் மூழ்கிறது. இச்சம்பவம் குறித்து மலேசிய கடலோர போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த மலேசிய கடலோர போலீசார் மீட்பு பணியை தொடங்கினர். அப்போது, 13 பேர் உயிருடனும், 7 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
மேலும், 100-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது. மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலில் படகு மூழ்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.




