விஜய் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

நடிகர் விஜய் நடிக்கும் ’தளபதி 65’ படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார். நடிகர் விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்து…

நடிகர் விஜய் நடிக்கும் ’தளபதி 65’ படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார்.

நடிகர் விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். ‘தளபதி 65’ என்று தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.

இதற்காக விஜய் உள்பட சில நடிகர்-நடிகைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஜார்ஜியாவுக்கு சென்று வந்தனர். படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பிய நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள தனது வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். தற்போது குணமடைந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இந்தப் படத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவர் மலையாளத்தில் இஷ்க், அனுகிரஹகீதன் அந்தோணி, ஆபரேஷன் ஜாவா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள குரூப், ராய் உள்ளிட்ட மலையாளப் படங்கள் வெளிவர இருக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.