இரவின் நிழல் படத்திற்கு ஆஸ்கார் விருதின் கதவுகள் திறக்கட்டும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் பார்த்திபன் முக்கியமானவர். அப்படி அவரது முயற்சியில் வெளியான பல படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு பார்த்திபன் நடித்து, இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் அப்படி ஒரு முயற்சி தான். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் பார்த்திபன். இரவின் நிழல் என்ற புதிய படத்தை நடித்து, இயக்கியுள்ளார் பார்த்திபன். உலகின் முதல் Non linear சிங்கிள் ஷாட் திரைப்படமாக இரவின் நிழல் உருவாகியுள்ளது.
https://twitter.com/offBharathiraja/status/1547779871350276097?t=jGfO5ggFUW7CgEt-R9LvrA&s=08
அண்மைச் செய்தி: ‘கல்லூரி விடுதிகளில் மின் நூல்கள்; ரூ.2,13,18,275 நிதி ஒதுக்கீடு!’
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ‘இரவின் நிழல்’ படத்திற்கு இயக்குநர் பாரதிராஜா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், படத்தினை, அனைவரும் தியேட்டரில் சென்று பார்த்து, ஆஸ்கார் விருதின் கதவைத் திறக்க வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அதேபோல, நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சினிமா மீதான உங்கள் ஆர்வமும் புதுமைக்கான தேடலும் பல ஆண்டுகளாக வலுப்பெற்று வருகிறது. இரவின் நிழல் வெற்றிபெற வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Karthi_Offl/status/1547778773478649858?t=VOrp4gOGm1D1reufpy-Ygw&s=08








