உணவு டெலிவரி பணியாளர்களுக்கு தனி நலவாரியம்; முதலமைச்சரின் அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு…

ஓலா, உபர், ஸ்விகி, ZOMATO உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சுதந்திரத் தின விழாவையொட்டி தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில்…

ஓலா, உபர், ஸ்விகி, ZOMATO உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சுதந்திரத் தின விழாவையொட்டி தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், ஓலா, ஊபர், ஸ்விகி, zomato போன்ற நிறுவனங்களின் பணியாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
முதலமைச்சரின் அறிவிப்புக்கு ஸ்விகி, Zomato ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  அதனை தற்போது பார்க்கலாம்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.