மதுராந்தகம் அருகே வாகன ஓட்டிகளை கடந்த 10 நாட்களாக குரங்கு ஒன்று அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பூத்தூர் கிராமத்தில் மதுராந்தகம்- திருக்கழுக்குன்றம் சாலையில் கடந்த 10 நாட்களாக ஆண் குரங்கு ஒன்று கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் செல்வோரை துரத்தி சென்று தாக்குவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோரை குரங்கு துரத்தும் போது விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது வரையிலும் 15 க்கும் மேற்பட்டோரை குரங்கு கடித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இது சம்பவம் குறித்து வனத்துறையினரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என மக்கள் தெரிவித்துள்ளனனர்.
—-கோ. சிவசங்கரன்







