“ஐயா.. தலைவா..” ஏ.ஆர்.ரகுமானை புகழ்ந்து தள்ளிய செல்வராகவன்…

மாமன்ன்னன் திரைப்படத்தில் இடம்பிடித்துள்ள “நெஞ்சமே நெஞ்சமே” பாடலை இயக்குனர் செல்வராகவன், “தமிழில் இப்படி ஒரு பாடலை கேட்டு எவ்வளவு நாளாயிற்று” என்று கூறியுள்ளார். பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி…

மாமன்ன்னன் திரைப்படத்தில் இடம்பிடித்துள்ள “நெஞ்சமே நெஞ்சமே” பாடலை இயக்குனர் செல்வராகவன், “தமிழில் இப்படி ஒரு பாடலை கேட்டு எவ்வளவு நாளாயிற்று” என்று கூறியுள்ளார்.

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்ன்னன் திரைப்படத்தில் நடிகர்கள் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ்,  உதயநிதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சுமார் ரூ35 கோடி செலவில் தயாரித்துள்ளது. இந்த படத்தின் வசூல் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. மொத்தம் இரண்டு நாட்களில் மாமன்னன் திரைப்படம் ரூ.10 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாமன்னன் படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதனை முன்னிட்டு படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடந்தது.

இந்நிலையில்,  மாமன்ன்னன் திரைப்படத்தில் இடம்பிடித்துள்ள “நெஞ்சமே நெஞ்சமே” பாடலை இயக்குனர் செல்வராகவன், “தமிழில் இப்படி ஒரு பாடலை கேட்டு எவ்வளவு நாளாயிற்று” என்று கூறியுள்ளார்.

https://twitter.com/selvaraghavan/status/1676124494589747200?s=20

இது குறித்து அவர் டிவிட்டரில், “தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று!! நெஞ்சமே நெஞ்சமே, ஐயா ஏ.ஆர்.ரகுமான் தலைவா! நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம். என்ன ஒரு வரிகள் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.