இன்ஸ்டாவில் 40 கோடி ஃபாலோவர்ஸை கடந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்ற செலினா கோம்ஸ்; ரசிகர்கள் உற்சாகம்

இன்ஸ்டாகிராமில் 40 கோடி  ஃபாலோவர்ஸை கடந்த முதல் பெண்மணி என்ற பெருமையை செலினா கோம்ஸ் பெற்றுள்ளார். செலினா இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் “400 மில்லியன் மக்களை நான்…

இன்ஸ்டாகிராமில் 40 கோடி  ஃபாலோவர்ஸை கடந்த முதல் பெண்மணி என்ற பெருமையை செலினா கோம்ஸ் பெற்றுள்ளார்.

செலினா இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் “400 மில்லியன் மக்களை நான் கட்டிப்பிடிக்க விரும்புகிறேன்” என்று எழுதியுள்ளார்.

செலினா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் 40 கோடி (400 மில்லியன்) ஃபாலோவர்ஸை கடந்துள்ளார். அதாவது சமூக ஊடக மேடையில் மந்திர எண்ணைத் தாக்கிய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் பெண் கைலி ஜென்னர் தான். கைலியின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 382 மில்லியனாக உள்ளது.

இந்நிலையில், செலினா TikTok இல் நேரலையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு உலகம் முழுவதும் சிறந்த நண்பர்கள் மற்றும் சிறந்த ரசிகர்கள் உள்ளனர், என்று தெரிவித்தார்.

செலினா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் 400 மில்லியன் ஃபாலோவர்ஸை கடந்ததால் அவரி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.