‘ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழா’வில் திரையிடப்படும் சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’!

இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.  தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குநர் சீனு ராமசாமி.…

Seenu Ramasamy's 'Kozhippannai Chelladurai' will be screened at 'Auckland International Film Festival'!

இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. 

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குநர் சீனு ராமசாமி. தற்போது இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ஏகன் நடித்துள்ளார். பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பாக டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து, பா விஜய் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.

இத்திரைப்படம் வரும்  செப்.20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் இப்படம் தேர்வாகியுள்ளது. செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிவரை நடைபெறும் ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

22 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வோர்ல்டு ப்ரீமியர்’ பிரிவில் செப்டம்பர் 18 ஆம் தேதி, இரவு 8:00 மணிக்கு ‘கோழிப் பண்ணை செல்லதுரை’ திரையிடப்படுகிறது. ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் கடந்த 22 வருடங்களில் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம் ‘கோழிப் பண்ணை செல்லதுரை’ என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.