முக்கியச் செய்திகள் இந்தியா

செகந்தராபாத் கலவரம்: முன்னாள் ராணுவ வீரர் கைது

தெலங்கானா மாநிலத்தின் செகந்தராபாத் ரயில் நிலையத்தில் அக்னிபாத் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

17.5 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபாத் (அக்னிபாதை) என்றும் பெயரிடப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்தார். சூழல் இவ்வாறு இருக்க, அக்னிபாத் திட்டம் தேசத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடற்படை தளபதி ஹரி குமார் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் காவல்துறையினர் இளைஞர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மட்டுமல்லாது கலவரம் குறித்து தீவிர விசாரணையையும் மேற்கொண்டது. விசாரணையின் அடிப்படையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேத்தில் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த அவுல சுப்பா ராவ் இந்த கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளதாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. முன்னாள் ராணுவ வீரரான இவர், ராணுவத்திற்கு இளைஞர்களை தயார்படுத்தும் அகாதெமியை வைத்து நடத்தி வருகிறார். மத்திய அரசின் அக்னிபாத் திட்ட அறிவிப்பையடுத்து பல வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் இளைஞர்களை போராட்டத்திற்கு தூண்டியுள்ளார் என காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்கக் கோரி முதலமைச்சர் கடிதம்

Halley Karthik

நடப்புக் கல்வியாண்டில் திருக்குறள் பாடமாக அறிமுகம்!

Gayathri Venkatesan

தமிழ்நாடு ஜிஎஸ்டி வரியை தமிழ்நாட்டிற்கு செலவு செய்ய வேண்டும் – அமைச்சர்

Ezhilarasan