பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு -தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு தேதியை மீண்டும் தள்ளி வைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.  கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 1…

ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு தேதியை மீண்டும் தள்ளி வைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாகப் பள்ளி திறப்பு 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கேற்ப அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் மேற்கொண்டு வந்தன.

ஆனால் வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி போகும் என்ற என்ற கேள்வி எழுந்தது. மேலும் வெயில் தாக்கம் குறையாமல் இருந்ததால் பள்ளி திறப்பை மேலும் தள்ளிவைக்க வேண்டும் எனவும் குறைந்தது தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்காவது விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.

அந்த வகையில் இன்று பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைத்து ஜூன் 12 ஆம் தேதி திறக்கலாமா? என்பது குறித்து தலைமைச்செயலகத்தில் முதலமைச்சருடன் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பிறகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.