முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அறிவிப்பு

பள்ளிகள் திறப்பு எப்போது என்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2022-2023 கல்வியாண்டுக்கான நாட்காட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இன்று வெளியிட்டார். பள்ளி வேலைநாட்கள், விடுமுறை நாட்கள், தேர்வு நாள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்,  “1-10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்படும். 12ம் வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். 2023 ஏப்ரல் 3ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. 11ம் வகுப்புக்கு 2023 மார்ச் 14ம் தேதியும், 12ம் வகுப்புக்கு 2023 மார்ச் 13ம் தேதியும் பொதுத்தேர்வு தொடங்கும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார்.நடைபெற்று வரும் பொதுத்தேர்வில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பின், கருணை மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என குறிப்பிட்ட அமைச்சர்,  “நீட் தேர்வுக்கு தனியே பயிற்சி வழங்கப்படாது. பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “நிதிநிலை சீராகும் போது பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஜூன் 13ல் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது. முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எப்போது திட்டத்தை தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். 210 வேலைநாட்கள் கொண்டதாக வரும் கல்வியாண்டு இருக்கும். காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும்” என்றும் கூறினார். இதன்மூலம் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்புகிறது கல்வியாண்டு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐடிஐயில் புதிய தொழிற்கல்வி முறையைத் தடுக்க எம்எல்ஏ வேல்முருகன் வலியுறுத்தல்

Web Editor

இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்

EZHILARASAN D

ஈரோடு இடைத்தேர்தல்; வினோதமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்

Web Editor