சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், செலவின பார்வையாளர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு செய்யவேண்டிய ஏற்பாடுகள் குறித்து அவர் அறிவுறுத்தினார்.

முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கினார். பறக்கும் படையினர், செலவினப் பார்வையாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கருத்துகளைக் கேட்டறிந்தார். வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுறுத்தினார்.







