#Sardar2 – படப்பிடிப்புக்காக சென்னை வந்த மாளவிகா மோகனன்!

சர்தார் 2 படப்பிடிப்புக்காக நடிகை மாளவிகா மோகனன் சென்னை வந்தடைந்தார்.  கடந்த 2022-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சர்தார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல்…

சர்தார் 2 படப்பிடிப்புக்காக நடிகை மாளவிகா மோகனன் சென்னை வந்தடைந்தார். 

கடந்த 2022-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சர்தார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

பிரின்ஸ் ஃபிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி மேற்கொள்கிறார். வில்லியம்ஸ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர். பேட்ட, மாஸ்டர், தங்கலான், படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். இந்நிலையில் படப்பிடிப்பிற்காக சென்னை வந்தடைந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.