பாதுகாப்பின்றி பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் -அதிர்ச்சி வீடியோ!

மன்னார்குடியில் எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இன்றி பாதாள சாக்கடைக்குள் இறங்கி தூய்மைப்பணியாளர்கள் அடைப்பை சரி செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடி நாராச சந்திப்பு பகுதியில் கழிவு நீர் செல்லும் சாக்கடையை சுத்தம்…

மன்னார்குடியில் எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இன்றி பாதாள சாக்கடைக்குள் இறங்கி தூய்மைப்பணியாளர்கள் அடைப்பை சரி செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி நாராச சந்திப்பு பகுதியில் கழிவு நீர் செல்லும் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்காக தூய்மைப்பணியாளர் மணிகண்டன் என்பவர் கழிவுநீர் கால்வாயில் உள்ள பாதாள சாக்கடையில் இறங்கி சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பைச் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மன்னார்குடியில் பாதாள சாக்கடை அடைப்புகளைச் சரி செய்வதற்காக மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய உபகரணங்கள் கையுறைகள் பாதுகாப்பு உடைகள்
போன்றவை வழங்க வேண்டும் என்றும் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்ற அதற்குரிய
எந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக
உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.