சமந்தா, விஜய் தேவரகொண்டா நடித்து செப்டம்பர் 1-ம் தேதி வெளியான ”குஷி” திரைப்படத்தின் இரண்டு நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. இவருடன் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் குஷி. இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை, ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் செப்.1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
https://twitter.com/MythriOfficial/status/1698218649226813853
குஷி திரைப்படம் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ் பதிப்பும், சில திரையரங்களில் தெலுங்கு பதிப்பும் வெளியானது. தெலுங்கில் நல்ல வரவேற்பும், தமிழில் கலவையான விமர்சனமும் பெற்ற குஷி திரைப்படம் 2 நாள்களில் ரூ.51 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளது.







