ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 215 ரன்கள் இலக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, தொடக்கம் முதல் குறிப்பிட்ட கால இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. பின்னர் களமிறங்கிய ஹர்பிரீத் பாட்டியா மற்றும் சாம் கரன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதையும் படியுங்கள் : கோடை வெயிலில் குளுகுளு-னு டீ குடிக்க வாங்க…! – ராணிப்பேட்டையில் மக்களைக் கவரும் தேநீர்க் கடை
ஹர்பிரீத் பாட்டியா 28 பந்துகளில் 41 ரன்கள் அடிக்க, சாம் கரன் 29 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கி, விளையாடி வருகிறது.








