தமிழகம்

கடனை திருப்பி செலுத்த முடியாததால் சலூன் கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை..!

தனியார் நிதிநிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் சலூன் கடைக்காரர், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர், ஓட்டேரியில் சொந்தமாக சலூன் கடை நடத்தி வந்தார். கொரோனா ஊரடங்கால் சலூன் கடைகள் மூடப்பட்டதை அடுத்து குடும்ப செலவுக்காக நண்பர்களிடன் கடன் வாங்கியுள்ளார். அதனை அடைக்க முடியாமல் தவித்து வந்த அவர் நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார். இதனால், கடன் சுமை அவருக்கு மேலும் அதிகரித்தது.

கடன் கொடுத்த தனியார் நிறுவனங்களும், தனியார் வங்கிகளும், பணத்தை திருப்பி செலுத்துமாறு ஏஜெண்டுகள் மூலம் மிரட்டல் விடுக்க தொடங்கியுள்ளன. இதனால், சில நாட்களாக தியாகராஜன் மன அழுத்தத்துடனே இருந்துள்ளார். இதனால் அதிக விரக்தியடைந்த அவர், வீட்டில் இருந்தவர்கள் தூங்கிய நேரத்தில், உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் வலி தாங்க முடியாமல் கத்திய அவரது அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடனை கட்டுவதற்காக பணத்தை உறவினர்களே ஏற்பாடு செய்திருந்த நிலையில், தியாகராஜனின் இந்த முடிவு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றம்

Saravana Kumar

டிஎன்பிஎஸ்சியுடன் டிஆர்பி இணைப்பா?

கோயிலில் உணவு தயாரித்து ஆதரவற்றோருக்கு உதவும் இஸ்லாமியர்: குவியும் பாராட்டுக்கள்!

Halley karthi

Leave a Reply