சாகித்ய விருது வென்ற எழுத்தாளர் உதயசங்கர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

மத்திய அரசால் வழங்கப்படும் சாகித்ய பால புரஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர் உதயசங்கர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் மத்திய…

மத்திய அரசால் வழங்கப்படும் சாகித்ய பால புரஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர் உதயசங்கர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசால் சாகித்திய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு மொழிகளில் குழந்தை இலக்கியம் படைப்பவர்களுக்கு சாகித்ய அகாடமி பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி பால சாகித்ய புரஸ்கார் விருதுக்காக எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ஆதனின் பொம்மை நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாகித்திய பால புரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

”கோவில்பட்டியை பொருத்தவரை எழுத்தாளர்களின் தலைநகரமாக உருவாகி வருகிறது. எதிர்கால தலைமுறையை எழுத்தாளர்களாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் படைப்புகள் இருக்கின்றன. கோவில்பட்டி பகுதியில் கரிசல் வட்டார இலக்கிய ஆய்வு மையம் ஒன்றை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளோம்.

அந்தக் கோரிக்கையை அரசு ஏற்று புதிய எழுத்தாளர்களை, படைப்பாளர்களை  மற்றும் ஆய்வாளர்களை உருவாக்குவதற்கு ஒரு மையமாக கோவில்பட்டியை மாற்ற வேண்டும். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மணிமண்டபத்தை அதற்காக பயன்படுத்தலாம் என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளோம். இவ்வாறு எழுத்தாளர் உதயசங்கர் நியூஸ்7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.