சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலில், பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோயில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர, மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்படும்.
அதன்படி ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் நாளை (வியாழக்கிழமை) ஆகும். இதற்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
நாளை அதிகாலை பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை தொடங்குகிறது. பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெறும் வழிபாடுகளுக்கு பிறகு நாளைய தினம் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.