ஜி 20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு!

டெல்லியில் செப்டம்பர் 9,10-ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்க மாட்டார் என அந்நாடு அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அதிபா் புடின் நேரில் பங்கேற்கும் திட்டமில்லை என…

டெல்லியில் செப்டம்பர் 9,10-ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்க மாட்டார் என அந்நாடு அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அதிபா் புடின் நேரில் பங்கேற்கும் திட்டமில்லை என ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.  அவா் காணொலி முறையில் பங்கேற்பாரா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

உக்ரைன் சிறுவர்களை ரஷ்யாவுக்கு கடத்துவது தொபான குற்றச்சாட்டில் புடினுக்கு எதிராக சாவதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது. எனவே கைது நடவடிக்கையை தவிர்க்க தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் புடின் நேரடியாக பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால், அதுபோன்ற எந்த நிர்பந்தமும் இல்லாத இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் புடின் நேரடியாக பங்கேற்க மாட்டாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.