தடுப்பணைகள், எண்ணெய் கிடங்குகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்

உக்ரைனின் டினிப்பர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை ரஷ்ய ராணுவ படையினர் தகர்த்தனர். சோவியத் ரஷ்யா ஆட்சியின்போது உக்ரைனின் கெர்சன் பகுதிக்கும், கிரிமியாவின் வறண்ட பகுதிக்கும் நீர் செல்வதற்காக டினிப்பர் ஆற்றில் கால்வாய் கட்டப்பட்டது.…

உக்ரைனின் டினிப்பர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை ரஷ்ய ராணுவ படையினர் தகர்த்தனர்.

சோவியத் ரஷ்யா ஆட்சியின்போது உக்ரைனின் கெர்சன் பகுதிக்கும், கிரிமியாவின் வறண்ட பகுதிக்கும் நீர் செல்வதற்காக டினிப்பர் ஆற்றில் கால்வாய் கட்டப்பட்டது. 2014ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்ததால், கால்வாயின் குறுக்கே தடுப்பணையை கட்டிய உக்ரைன், கிரிமியாவிற்கு வழங்கி வந்த 85 சதவீத குடிநீர் தேவையை துண்டித்தது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா கடும் அதிருப்தியில் இருந்து வந்தது.

இந்நிலையில், உக்ரைன் மீது 4வது நாளாக போர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவ படையினர் டினிப்பர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணையை வெடிவைத்து தகர்த்துள்ளதாக கிரிமியா தரப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் லுகான்ஸ்க் அருகே உள்ள எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் லுகான்ஸ்க் அருகே உள்ள எண்ணெய் கிடங்குகள் ஒன்று தீப்பற்றி எரிந்து வருவதாக உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.