ரஷ்யாவில் விரைவில் முடக்கப்பட இருக்கும் ட்விட்டர்!

ரஷ்யாவில் சமூகத்திற்கு எதிரான வகையில் பல தவறான தகவல்களை ட்விட்டர் பகிர்ந்து வருவதால் அதனை முடக்க 30 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார் ரஷ்யாவின் ஊடக தணிக்கையாளர் ரோஸ்கோம்னாட்ஸர். ட்விட்டர் தளத்தில் சமூகத்திற்கு எதிரான வகையில்…

ரஷ்யாவில் சமூகத்திற்கு எதிரான வகையில் பல தவறான தகவல்களை ட்விட்டர் பகிர்ந்து வருவதால் அதனை முடக்க 30 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார் ரஷ்யாவின் ஊடக தணிக்கையாளர் ரோஸ்கோம்னாட்ஸர்.

ட்விட்டர் தளத்தில் சமூகத்திற்கு எதிரான வகையில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள், போதைப் பொருட்களை ஊக்குவிப்பது, இளம் தலைமுறையினரைத் உயிரிழப்பு க்குத் தூண்டுவது போன்ற பலபதிவுகள் உலா வந்தவண்ணம் உள்ளது. கடந்த சில வாரங்களாக இத்தகைய செயல்பாடுகளை முடக்க ரஷ்யாவின் ஊடக தணிக்கையாளர் ரோஸ்கோம்னாட்ஸர் முயற்சி செய்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் இத்தகைய தவறான தகவல்களை முடக்குவதில் தவறியதே இதற்கு காரணமாக இருந்து வருகிறது.

பதிவிடப்படும் இதுபோன்ற தகவல்களை முடக்க ரஷ்யா ட்விட்டருக்கு ஒரு மாத காலம் அவகாசம் அளித்துள்ளது. கொடுக்கப்பட்ட காலத்திற்குள் தவறுகளைச் சரிசெய்ய வழி செய்யாவிட்டால் ரஷ்யாவில் ட்விட்டர் முற்றிலுமாக முடக்கப்படும் என்று கூறியுள்ளார், ரஷ்யாவின் ஊடக தணிக்கையாளர் ரோஸ்கோம்னாட்ஸர்.

ரோஸ்கோம்னாட்ஸர் எடுத்து வரும் முயற்சிகளால் ரஷ்யாவில் 50% வரை பதிவுகள் பகிரப்படுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ட்விட்டர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் ரஷ்யா இன்டெர்ஃபேக்ஸ் நிறுவனத்திடம் புகாராக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.