விவாகரத்து குறித்த வதந்தி; மனம் திறந்த சமந்தா

விவாகரத்து குறித்து வெளிவரும் வதந்திகள் என்னை சோர்ந்து போக செய்யாது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.  நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி…

விவாகரத்து குறித்து வெளிவரும் வதந்திகள் என்னை சோர்ந்து போக செய்யாது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். 

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக, கடந்த 2ம் தேதி சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். நாக சைதன்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில், இத்தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் விவாகரத்து செய்து கொண்டதற்கான காரணம் என பல வதந்திகள் வந்து கொண்டுள்ளன. எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் எனக்கு குழந்தை வேண்டாம் என நான் சொன்னது போன்றும், மேலும் குழந்தையை கலைத்து விட்டதாகவும் பல வதந்திகள் வந்தது. இதெல்லாம் தவறானவை. என்னுடைய விவாகரத்து மிகவும் வலியானது; அதிலிருந்து வெளியேற எனக்கு இன்னும் அவகாசம் தேவை; விவாகரத்து குறித்து இடைவிடாமல் வரும் வதந்திகள் என்னை காயப்படுத்தியது, ஆனால் ஒருபோதும் சோர்ந்து போக செய்யாது என தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.