ஆர்டிஎக்ஸ் பட்ஜெட் ரூ.8 கோடி – வசூல் ரூ.100 கோடி… நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று வெளியீடு…

‘RDX’ படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று (செப்.24) வெளியாகியுள்ளது. ஷேன் நிகாம் நடித்துள்ள மலையாள திரைப்படமான ‘RDX: Robert Dony Xavier’ ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் ஷேன்…

‘RDX’ படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று (செப்.24) வெளியாகியுள்ளது.

ஷேன் நிகாம் நடித்துள்ள மலையாள திரைப்படமான ‘RDX: Robert Dony Xavier’ ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் ஷேன் நிகாம், ஆண்டனி வர்கீஸ், நீரஜ் மாதவ் மூவரும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘RDX’.

லால், பாபு ஆண்டனி, மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். வீக் என்ட் ப்ளாக் பஸ்டர் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவானது. மலையாள சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை ஈட்டிய படங்கள் வரிசையில் இந்தப் படமும் சேர்ந்துள்ளது. இப்படம் உலகளவில், ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று (செப்.24) வெளியாகியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.